/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் நடமாட முடியாமல் மக்கள் தவிப்பு
/
கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் நடமாட முடியாமல் மக்கள் தவிப்பு
கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் நடமாட முடியாமல் மக்கள் தவிப்பு
கரூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் நடமாட முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 26, 2024 04:08 AM
கரூர்: மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், கோடைக்காலம் அதிக வெப்ப நிலையை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே வேலுார் மாவட்டம்தான் அதிக வெப்பம் கொண்டதாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக வேலுாரை பின்னுக்கு தள்ளி ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்கள் அதிக வெப்பம் கொண்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று, 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.
மதுரை - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகல், 12:00 முதல், மாலை 4:00 மணி வரை கானல் நீரை காண முடிகிறது. சாலைகளில் செல்லும்போது அனல் காற்று வீசுகிறது.
இதனால்தான் மதியம், 12:00 மணி முதல், 3:00 மணி வரை வெளியில் யாரும் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் நேரங்களில், வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு மாவட்டத்தில், 33 சதவீதம் வனங்கள் இருந்தால் மட்டுமே அங்கு போதிய மழை கிடைக்கும். ஆனால் கரூர் மாவட்டத்தில், 4 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. பெரும்பாலும் வறண்ட நிலங்களாகவே உள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் போன்ற இடங்களில் பாசனங்கள் போதிய அளவில் நடைபெறுவதில்லை. மேலும் கல்குவாரிகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் மரங்களும் அதிகம் கிடையாது. மழைப்பொழிவும் கரூர் மாவட்டத்தில் குறைவு. வனத்துறை சார்பில் பல்வேறு மரக்கன்றுகள் மானிய விலையிலும், இலவசமாகவும் கொடுக்கிறோம்.
அவற்றை பொதுமக்கள் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று உறுதிமொழியுடன் மரங்களை வளர்த்தால், வெப்ப அலை வீச்சில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறினர்.

