ADDED : ஜூலை 12, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில், நீச்சல் குளம் அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
கரூர்-வெள்ளி யணை சாலை கலெக்டர் அலுவலகம் அருகே, அரசு விளையாட்டு மைதானம் உள்ளது. அதில், 6.28 கோடி ரூபாய் மதிப்பில் நீச்சல் குளம் அமைக்கும் பணியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோகான்பரன்ஸ் மூலம் துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, விளையாட்டு மைதானத்தில், நீச்சல் குளம் கட்டுமான பணிகளை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.