/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா
ADDED : ஆக 23, 2025 01:36 AM
கரூர், கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் (2025---29) முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடந்தது. அதில், உலகளாவிய வேலைவாய்ப்புகள் குறித்தும், மாணவர்கள் அதற்கேற்ப தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும் என, கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசினார். மேலும், மாற்றம் அறக்கட்டளை தலைவர் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆள் சேர்ப்பு தலைவருமான சுஜித்குமார், பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான திறன்கள் குறித்து பேசினார்.
விழாவில், கல்லுாரியின் அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் சரண் குமார், செயல் இயக்குனர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முருகன், மாணவர் சேர்க்கை குழும தலைவர் சுந்தர்ராஜூ உள்பட பலர் பங்கே ற்றனர்.
ஏற்பாடுகளை, முதலாமாண்டு துறைத்தலைவர் சித்திரகலா, மாணவர் விவகாரத்துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.