/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் ரூ.7 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா
/
அரசு பள்ளியில் ரூ.7 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா
அரசு பள்ளியில் ரூ.7 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா
அரசு பள்ளியில் ரூ.7 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா
ADDED : பிப் 10, 2025 07:14 AM
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா திறந்து வைத்தார். இந்த நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்பள்ளியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம், கழிப்பறை புனரமைத்தல், புதிய தரைதளம் அமைத்து வர்ணம் பூசுதல், கதவு, ஜன்னல்கள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் செய்து தரப்பட்டன. டவுன் பஞ்., துணைத்தலைவர் சதீஸ், பள்ளி தலைமை ஆசிரியர் லதா உள்பட பலர் பங்கேற்றனர்.