ADDED : ஜூலை 16, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை கட்டட பொறியாளர் சங்க பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.முன்னாள் சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மண்-டல தலைவர் கண்ணன், முன்னாள் மாநில தலைவர் சரவணன், மண்டல செயலாளர் வாசுதேவன், முன்னாள் மாநில செயலாளர் புருசோத்தமன், முன்னாள் மாநில உதவி தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். சிறப்பாளராக எம்.எல்.ஏ., மாணிக்கம், நக-ராட்சி தலைவர் சகுந்தலா ஆகியோர் கலந்து கொண்டனர்.தலைவராக சத்தியமூர்த்தி, செயலாளர் சரவணன், துணை தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் கார்த்திக்கேயன், துணை செயலாளர் சாந்தகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். சிறப்பு உறுப்பினர்கள் சணேஷ், சிவாஜி ஆகியோர் நன்றி கூறினர்.