/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 'செல்பி பாயின்ட்' தொடக்க நிகழ்ச்சி

ADDED : மார் 15, 2024 03:46 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, 'செல்பி பாயின்ட்' தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதனை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சமூக ஊடகங்கள், கல்லுாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி, 'செல்பி பாயின்ட்,' தொடர் ஓட்டங்கள், இரு சக்கர வாகன பேரணி, கையெழுத்து இயக்கம், விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.