ADDED : ஆக 16, 2026 06:26 AM

கரூர்:கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
கலெக்டர்
முத்துக்குமரன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, போலீஸ்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கூட்டுறவு, உணவு
மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு, 1.07
கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன்களையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு, 15,300
ரூபாய் மதிப்பில் காதொலி கருவி, வேளாண்- உழவர் நலத்துறை சார்பில்,
2 பயனாளிகளுக்கு, 56,483 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.
மேலும் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை
சார்பாக 2 பயனாளிக்கு, 78,034 மதிப்பில் நலத்திட்ட உதவி, குறு, சிறு
மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், இருவருக்கு, 8.23
லட்சம் மதிப்பில் கடனுதவி, தொழிலாளர் நலத்துறை சார்பில் இருவருக்கு,
4.10 லட்சம் மதிப்பீட்டில் விபத்து மரணம் தொகை, இருவருக்கு, 1.10 லட்சம்
மதிப்பீட்டில் இயற்கை மரணத்தொகை என மொத்தம், 38 பயனாளிகளுக்கு,
1.23 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்
முத்துக்குமரன் வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் அனைத்து நகராட்சி மற்றும் டவுன் பஞ்., அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
