/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்
/
இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 12, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, இந்திய ஜனநாயக கட்சி உயர் மட்ட குழு நிர்-வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில துணை செயலாளர் உதய-சூரியன் தலைமையில் நடந்தது.
அதில் வரும், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணிகளை கிளை வாரியாக தொடங்குவது, நிர்வாகிகளை நியமித்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, மாநில துணை செயலாளர் ஆனந்தன் விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில், கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் சித்ரா, ஒன்றிய செயலாளர் முத்தமிழ் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.