/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீழவெளியூரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்கம்
/
கீழவெளியூரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : மார் 17, 2024 02:39 PM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூரில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோல் குளித்தலை நகராட்சியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலையில் நடைபயிற்சி தளத்தை, பொது மக்கள் பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். மணத்தட்டையில் இரு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி திறப்பு விழாவிற்கு, நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், அரசு வக்கீல் சாகுல், மாவட்ட பொறுப்பாளர் அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரண்டு குடிநீர் தொட்டியை எம்.எல்.ஏ., மாணிக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.கவுன்சிலர்கள் சந்துரு, பொன்னர் மற்றும் மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

