/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டுமான பொருட்கள் விலை குறைக்க மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
/
கட்டுமான பொருட்கள் விலை குறைக்க மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
கட்டுமான பொருட்கள் விலை குறைக்க மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
கட்டுமான பொருட்கள் விலை குறைக்க மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2024 05:20 AM
கரூர்: கரூர், ராயனுாரில் மா.கம்யூ., மாநகர மாநாடு நடந்துது. இதில், மாநகர குழு உறுப்பினர் ஹோச்சுமின் தலைமை வகித்தார். கரூர் பஸ் ஸ்டாண்ட் பணி துவக்கப்பட்டு,
தற்போது நிறுத்தப்பட்டுள்-ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாநகராட்சி-யுடன் இணைந்து புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும். கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இடிக்கப்-பட்ட, 24 கடைகளை மீண்டும் அதே இடத்தில் கட்ட நடவ-டிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் தேவைக்காக கட்டுமான தொழிலுக்கு மணல் மாட்டுவண்டி அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டுமான தொழிலுக்கு ஆதாரமான எம்.சாண்ட், பி.சாண்ட், அரை, முக்கால், ஒன்றரை ஜல்லி மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட கட்டு-மான பொருட்கள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த கட்டுமான தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்க்கையும் பாதுகாக்க கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து பொதுமக்-களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், செய-லாளர் ஜோதிபாசு, மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.