/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்காற்று ஏரியில் முட்புதர் அகற்ற வலியுறுத்தல்
/
பூங்காற்று ஏரியில் முட்புதர் அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வீரகுமரான்பட்டி அருகில் செல்லும் பூங்காற்று ஏரியில், அதிகமான அளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரகுமரான் பட்டி அருகில் பூங்காற்று வடிகால் ஏரி செல்கிறது. இந்த ஏரியில் மழை காலங்களில் வரும் மழை நீர் வடிந்து, கோட்டமேடு வாய்க்காலில் சென்று கலக்கிறது. கடந்த வாரம் பூங்காற்று ஏரியில் அதிகமான மழை நீர் வந்தது. இந்த மழை நீர் நாணல் செடிகள் மற்றும் புதர்களின் வளர்ச்சி காரணமாக பல இடங்களில் தேங்கியது. இதனால் மழை நீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டது.எனவே, முட்புதர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.