தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 23, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் பகுதியாக க.பரமத்தி உள்ளது.

க.பரமத்தி யூனி-யனில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை-யையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்து, தீவிபத்து, தீ விபத்து-களால் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீய-ணைப்பு நிலையம் இல்லை.கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீய-ணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us