/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு
ADDED : ஆக 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கோமதி, வருடாந்திர பணிகளை ஆய்வு செய்தார்.
புகழூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. அதில், தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், துணை அழைப்பு விபரம், விபத்தில் சிக்கியவர்களை காப்பற்றியதன் விபரம், பட்டாசு கடைகள் குறித்த விபரங்கள், தீயணைப்பு கருவிகளின் தரம் ஆகியவற்றை, மாவட்ட உதவி அலுவலர் கோமதி ஆய்வு செய்து விளக்கம் கேட்டறிந்தார். பிறகு, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, புகழூர் நிலைய தீயணைப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.