/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
கரூர்: புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் - திருக்காடுதுறை அருகே, புகழூர் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது.
அதில், கரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீ-ரென ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வாகனம், தளவாட பொருட்கள், பாது-காப்பு உபகரணங்கள், தீ விபத்து மீட்பு பணி விபரங்களை கேட்-டறிந்து, பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என, விளக்கம் கேட்டறிந்தார். அப்போது, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உடனி-ருந்தனர்.