/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
மாயனுார் கதவணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாயனுார் கதவணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாயனுார் கதவணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஆக 03, 2024 06:39 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது, கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்து வருவதால், கூடுதல் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து, தற்போது, ஒரு லட்சத்து, 70,000 கன அடி நீர் வருகிறது. இந்த தண்ணீர் மாயனுார் கதவணை வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் காவிரி ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக நில நிர்வாக ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பழனிசாமி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாயனுார் கதவணையில் வரும் காவிரி நீரின் அளவு, அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் காவிரி ஆற்றில், மக்கள் இறங்காமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீர்வளத்துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும், வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையினர், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலெட்சுமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணா, மாயனுார் உதவி பொறியாளர் கார்த்திக், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.