/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீரேற்று பாசன கிணறுகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு
/
நீரேற்று பாசன கிணறுகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 20, 2024 07:15 AM
கரூர் : கரூர் அருகே, நீரேற்று பாசன சங்க கிணறுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் செயல்படும் கிணற்று நீரை, சாயப்பட்டறைகளுக்கு பயன்படுத்துவதாக, விவசாயிகள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று அமராவதி வடிநில கோட்ட நீர்வளத்துறை பொறியாளர் சந்தோஷ்குமார், சுற்றுச்சூழல் உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார், பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று ராயனுார் பகுதியில் நீரேற்று பாசன கிணறுகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, நீரேற்று பாசன கிணற்றின் தண்ணீரை, சாயப்பட்டறைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என, அதன் உரிமையாளர்களுக்கு, அரசு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.