/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி
/
கிருஷ்ணராயபுரத்தில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி
ADDED : மார் 22, 2024 07:04 AM
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிச்சம்பட்டி சாலையில், தெரு விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, பிச்சம்பட்டி சாலையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சரி வர எரியாததால், இரவு நேரங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், புதிய தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. இதில் பழைய தெரு விளக்குகள் மாற்றி விட்டு, புதிய விளக்குகள் அமைக்கப்பட்டது. பிச்சம்பட்டி கடைவீதி, கிருஷ்ணராயபுரம் சாலை ஆகிய இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தெரு விளக்கு அமைக்கும் பணியில் பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

