sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னை மரங்களுக்கு காப்பீடு கரூர் கலெக்டர் தகவல்

/

தென்னை மரங்களுக்கு காப்பீடு கரூர் கலெக்டர் தகவல்

தென்னை மரங்களுக்கு காப்பீடு கரூர் கலெக்டர் தகவல்

தென்னை மரங்களுக்கு காப்பீடு கரூர் கலெக்டர் தகவல்


ADDED : டிச 16, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில், 8,381 ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தென்னை மரங்களை, இயற்கை சீற்-றங்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பயிர் காப்பீடு செய்வது அவசியம். குறைந்தபட்சம், ஐந்-திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களுக்கு காப்-பீடு செய்து கொள்ள முடியும்.நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்கள் மட்டுமே பயிர் காப்பீடு செய்-யத்தக்கதாகும். 7 முதல் 60 வயதிற்கு உட்பட்ட நெட்டை ரக, 4 முதல் 60 வயதிற்கு உட்பட்ட குட்டை அல்லது ஒட்டு ரக தென்னை மரங்க-ளுக்கு பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதில் 4--15 வயது வரையிலான தென்னை மரத்-திற்கு, 900 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். இதற்கு மரம் ஒன்றிற்கு விவசாயிகள் ஆண்டு ஒன்றுக்கு, 2.25 வீதம் பிரிமியம் செலுத்த வேண்டும். 16--60 வயது வரை உள்ள தென்னை மரங்களுக்கு, 1,750 ரூபாய் இழப்பீடு வழங்கப்-படும். இதற்கு மரம் ஒன்றிற்கு விவசாயிகள், 3.50 வீதம் ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.

தென்னை மரங்களுக்கு ஒரு ஆண்டு காலத்-திற்கோ அல்லது 3 ஆண்டு கால அளவு வரையில் காப்பீடு செய்து கொள்ளலாம். தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்-டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ, இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு செய்ய, நில ஆவ-ணங்கள், ஆதார் நகல், வி.ஏ.ஓ.,அசல் அடங்கல் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவ-ரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்-ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us