/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடகிழக்கு பருவமழை தீவிரம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்
/
வடகிழக்கு பருவமழை தீவிரம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்
வடகிழக்கு பருவமழை தீவிரம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்
வடகிழக்கு பருவமழை தீவிரம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்
ADDED : அக் 21, 2025 01:56 AM
கரூர், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் ஜூன், 12 முதல் காவிரி டெல்டாவில் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி பாசன பகுதிகளில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, 4,207 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. காவிரி ஆற்றில், 2,737 கன அடியும், பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, நேற்று மாலை முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் மாயனுார் கதவணை தண்ணீர் வரத்து உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அமராவதி ஆற்றில், 450 அடியும், பாசன வாய்க்காலில், 450 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 72.02 அடியாக இருந்தது.