/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
/
பாசன வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : அக் 18, 2024 03:06 AM
பாசன வாய்க்கால்
துார்வாரும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், அக். 18-
பிடாரி அம்மன் சாலை வழியாக செல்லும், பாசன வாய்க்காலில் துார் வரும் பணிகள் துரிதமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ள பாளையம் பாசன வாய்க்கால் லாலாப்பேட்டை ரயில்வே கேட் வழியாக வந்து, பிடாரி அம்மன் கோவில் சாலை வழியாக விளை நிலங்களுக்கு நீர் செல்கிறது. தற்போது வாய்க்காலில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பாசன நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு நாணல் செடிகள் முழுமையாக அகற்றும் பணி நடந்தது. இதனால், பாசன நீர் விரைவாக செல்லும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் மழை நீர் விரைந்து வடிவதற்கும், இந்த பணிகள் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைத்துள்ளது.