/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்
/
வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 22, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்-களில், களை எடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வீரகுமரான்பட்டி, வீரவள்ளி, புதுப்பட்டி, மகிளிப்பட்டி, மகாதா-னபுரம் ஆகிய
இடங்களில் விவசாயிகள் பரவலாக நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெல்
வயல்களில் அதிகமான களைகள் வளர்ந்து வருகிறது. இதனால் நெற் பயிர்கள் வளர்ச்சி
பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வளர்ந்து வரும் களைகளை எடுக்கும்
பணிகளில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.