/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்
/
நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்
ADDED : மார் 25, 2024 01:33 AM
கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி
கிராமத்தில் நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணியில்
விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் நெல்
சாகுபடி செய்து வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர்,
கிணற்று பாசன மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது, குறைந்த நாட்களில்
விளைச்சல் தரும் நெற் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, 15
நாட்களுக்கு முன் வயல்களில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டு
பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இந்த பயிர்களுக்கு நடுவே களைகள்
அதிகமாக வளர்ந்துள்ளதால், பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்த
பயிர்கள் வளர்ந்து வரும் வகையில் விவசாய தொழிலாளர்கள் கொண்டு களை
எடுக்கும் பணி தீவிரமாக நடந்தது.

