/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அண்ணனுக்கு கட்சியில் பதவி தராத எம்.ஜி.ஆர்.,மாஜி அ.தி.மு.க.,-- எம்.எல்.ஏ., ருசிகர தகவல்

ADDED : மே 07, 2025 01:19 AM
கரூர்:''அ.தி.மு.க.,வில், சொந்த அண்ணனுக்கு கூட, எம்.ஜி.ஆர்., பதவி தரவில்லை,'' என, பெரம்பலுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பூவை செழியன் பேசினார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், மே தின விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான விஜயபாஸ்கர் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பூவை செழியன் பேசியதாவது: தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட போது, அவரது அண்ணன் சக்கரபாணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க., கொடியை ஏற்றுவது, பெயர் பலகைளை திறப்பது போன்ற பணிகளில் மும்முரமாக இருந்தார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பொறுப்பில் இருந்த சோலை என்பவரிடம், 'எம்.ஜி.ஆரிடம் சொல்லி கட்சியில் ஏதாவது உறுப்பினர் பதவியை வாங்கி தர வேண்டும்' என, சக்கரபாணி கேட்டார்.சோலையும் இதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அமைதியாக கேட்ட அவர் பேசாமல் சென்று விட்டார்.
பிறகு, முக்கிய நிர்வாகிகளை அழைத்த எம்.ஜி.ஆர்., சக்கரபாணிக்கு உடல் நிலை சரியில்லை. அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என உத்தரவிட்டார். இதனால் சக்கரபாணியை நிர்வாகிகள் அழைப்பதை தவிர்த்து விட்டனர். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும் முதல்வர் பதவிக்கும், பொதுச்செயலர் பதவிக்கும் வரலாம். அப்படி வந்தவர்தான் பொதுச்செயலர் இ.பி.எஸ்., வரும், 2026ல் இ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்க உழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.