/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2024 03:39 AM
கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து, சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பேரணி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி, பழைய அரசு தலைமை மருத்துவமனை, வடக்கு பிரதட்சணம் சாலை, தின்னப்பா கார்னர், மேற்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார் வழியாக கரூர் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தது.
பேரணியில் எஸ்.பி.,பிரபாகர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, ஆர்.டி.ஓ., முகமது பைசல், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக
சென்றது.
கள்ளச்சாராயம் குடித்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மது ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு செய்தனர். ஆசிரியர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நெடுஞ்சாலை வழியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* குளித்தலை போக்குவரத்து போலீசார் சார்பில், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்டு, காவிரி நகர் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது. போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கோஷங்களை முழக்கமிட்டவாறு மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், வெங்கடாசலம் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போக்குவரத்து போலீசார், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து
கொண்டனர்.
* அரவக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். யோகா, உடற்பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம், குடும்பத்துடன் அன்புச் சங்கிலி கட்டாயம் தேவை என, எடுத்துரைத்தனர்.
பேரணி தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. ஆசிரியர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.