தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தினம் கொண்டாட்டம்


ADDED : மார் 09, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில், 36வது சர்வ-தேச பெண்கள் தினத்தையொட்டி, தலைவர் இள-வரசி தலைமையில், வீரராக்கியம் அலுவல-கத்தில் கருத்து பட்டரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், விதிமுறை மீறி போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும், பாலியல் புகார்-களை தெரிவிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

பணிபுரியும் பெண்களுக்கு இ.எஸ்.ஐ., வழங்க உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் பெண்க-ளுக்கு, பாதுகாப்பான தங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். பெண்கள் சமத்துவம் மற்றும் பாகுபா-டின்மை சட்டம்-2025ஐ கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.நிகழ்ச்சியில், துணைத்தலைவர் பாக்கியம், செயலாளர் கிறிஸ்டினா சாமி, துணை செயலாளர் ஜானகி, பொருளாளர் மஞ்சுளா, எழுத்தாளர் சாலை செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

* கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில், மகளிர் அணி துணைக்குழு அமைப்பாளர் முத்து-மாரி தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்ட-டத்தில் கருத்தரங்கம் நடந்தது. அதில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி இணை பேராசிரியர் தேவி லட்சுமி, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் குறித்து, விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சி தலைவர் நேர்முக உதவியாளர் தேன்மொழி, அரசு ஊழியர் சமுதாயத்தில் மகளிர் பங்கு குறித்தும் பேசினார்.

கருத்தரங்கில், மாவட்ட மகளிர் துணை குழு உறுப்பினர் தமிழ்மணி, நிர்வாகிகள் செல்வராணி, சுமதி, சிவகாமி, அமுதா, லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us