/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் அறிமுக பயிற்சி வகுப்பு தொடக்கம்
/
தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் அறிமுக பயிற்சி வகுப்பு தொடக்கம்
தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் அறிமுக பயிற்சி வகுப்பு தொடக்கம்
தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் அறிமுக பயிற்சி வகுப்பு தொடக்கம்
ADDED : ஜூலை 01, 2025 01:02 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒருவார அறிமுக பயிற்சி வகுப்பை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து பேசியதாவது:
கல்லுாரியில், 4,249 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இளங்கலையில், 18 பாடப்பிரிவு, முதுகலையில், 11 பாடப்பிரிவு, 11 முனைவர் பட்ட ஆராய்ச்சி பிரிவு கள் உள்ளது. இந்த ஆண்டு இளங்கலையில் பி.சி.ஏ., பி.ஏ. தமிழ் (சுழற்சி-2), பி.காம் (சி.ஏ), பி.எஸ்.சி (வேதியியல் தமிழ் வழி- சுழற்சி 2) ஆகிய 4 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், 1,225 மாணவ, மாணவியர் முதலாமாண்டு சேர்ந்து பயில்கின்றனர்.
விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் அதிக கவனம் செலுத்தும் போது நமது உடல் நலம், மன நலம் ஆரோக்கியமாக இருக்கும். உழைப்பு என்பது நல்ல முறையில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும். உயர்கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அரசின் போட்டி தேர்வுகள் குறித்து தொடர்புடைய துறை வல்லுனர்கள் மூலம் எடுத்துரைக்கப்படவுள்ளது. இவ்வாறு பேசினார்.
கல்லுாரி முதல்வர் ராதா கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.