/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இனுங்கூர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
இனுங்கூர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
இனுங்கூர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
இனுங்கூர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஜூலை 08, 2025 01:02 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த இனுங்கூரில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
எல்லையம்மன், ஜெமத்கனி முனிவர், பரசுராமரை சரஸ்வதி, விநாயகர், பாலமுருகன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலாக இது உள்ளது.
இக்கோவிலை புனரமைத்து, குடமுழுக்கு விழா நடத்துவது என்று விழா கமிட்டியினர், பொதுமக்கள் முடிவெடுத்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு உத்தரவின்படி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த 3ம் தேதி குளித்தலை காவிரியாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் யாகவேள்வி சாலையில் புனிதநீரை வைத்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, லட்சார்ச்சனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை நடத்தினர்.
நேற்று காலை, 10:00 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தை மேளவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து, வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், முன்னாள் யூனியன் குழு தலைவர் சந்திரசேகர், காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு பின், கும்பாபி ேஷகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் செய்திருந்தனர்.