sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொய் புகாரில் போலீசை அலையவிட்ட கொல்லிமலை தம்பதியிடம் விசாரணை

/

பொய் புகாரில் போலீசை அலையவிட்ட கொல்லிமலை தம்பதியிடம் விசாரணை

பொய் புகாரில் போலீசை அலையவிட்ட கொல்லிமலை தம்பதியிடம் விசாரணை

பொய் புகாரில் போலீசை அலையவிட்ட கொல்லிமலை தம்பதியிடம் விசாரணை


ADDED : டிச 13, 2024 08:45 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்லிமலை: பொய் புகார் கொடுத்து, போலீசை அலையவிட்ட கொல்லி மலை தம்பதியரிடம் போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தேவனுார் நாடு, பரியூர்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், 55. இவருக்கு சரோஜா, 53, பூங்கா, 48, என இரு மனை-வியர் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில் தங்கராஜ் வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தார். அதில், தன்-னையும், தன்னுடைய இரு மனைவியரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கட்டி போட்டு-விட்டு, தாலிச்செயின் உள்ளிட்ட, 50 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய், டூவீலர் ஆகியவற்றை கொள்ளை-யடித்து சென்றதாக பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை சேலம் எஸ்.பி., கவு-தம்கோயல், ஏ.டி.எஸ்.பி., தங்கராஜ், ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட போலீசார், சம்-பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவன், மனைவியர் இருவரும் முன்-னுக்கு பின் முரணாக பதில் கூறினர். 5 லட்சம் ரூபாய் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு, உறவினர் பெயரை கூறி அவர் கொடுத்ததாக கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரித்த போது, அவர் பணம் எதுவும் தர-வில்லை எனக்கூறியதையடுத்து, தங்கராஜ் பொய் சொல்லியது உறுதியானது.

மேலும் வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, தங்க ராஜ் மனைவியின், 5 பவுன் தாலிக்கொ-டியை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபி-டித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சேலத்தை சேர்ந்த ஒருவரிடம், 3 லட்சம் ரூபாய் தங்கராஜ் வாங்கியதாகவும், தொடர்ந்து வட்டி கட்டி வந்த தங்கராஜ் சில மாதங்களாக வட்டி தர-வில்லை என தெரிகிறது. வட்டி கொடுக்காததால், அந்த நபர் நேற்று முன்தினம் தங்கராஜ் வீட்டிற்கு வந்து, அவரது பஜாஜ் பிளாட்டினா வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், ஆத்திரம-டைந்த தங்கராஜ், அவரை மாட்டி விட, பொய்-யாக புகார் அளித்ததாக கூறியுள்ளார்.

இதுவும் உண்மைதானா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாகனத்தை எடுத்து சென்று விட்டார் என கூறிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us