/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலை கல்லுாரியில் சேர தனி தேர்வுகளுக்கு அழைப்பு
/
அரசு கலை கல்லுாரியில் சேர தனி தேர்வுகளுக்கு அழைப்பு
அரசு கலை கல்லுாரியில் சேர தனி தேர்வுகளுக்கு அழைப்பு
அரசு கலை கல்லுாரியில் சேர தனி தேர்வுகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:21 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர தனி தேர்வர்கள் மற்றும் விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், 14ம் தேதிக்குள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என முதல்வர் வசந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த, 6ம் தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு வரும், 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் இதுவரை பங்கேற்காத மாணவர்களும், இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவ மாணவியரும் வரும், 14ம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் தனி தேர்வு எழுதியவர்களும், ஏற்கனவே பிளஸ் 2 முடித்து விட்டு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும், 14ம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.