/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலைவாய்ப்புடன் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
வேலைவாய்ப்புடன் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 12, 2024 06:53 AM
கரூர் : 'தாட்கோ' மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'தாட்கோ' சார்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, எச்.சி.எல்., நிறுவனம் மூலம், பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., ஆகிய வேலைவாய்ப்புடன் கூடிய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2வில், 2022-23ம் ஆண்டு மாணவர்கள், 60 சதவீதம், 2023--24 ஆண்டுகளில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், எச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, www.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

