/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுதந்திர போராட்ட ஆவணம், பொருட்கள் அருங்காட்சியகத்திற்கு வழங்க அழைப்பு

ADDED : ஜூன் 27, 2024 03:58 AM
கரூர்: சுதந்திர போராட்டம் குறித்த ஆவணம், பொருட்களை வழங்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், செய்தி தாள்கள், ராட்டைகள், பட்டையங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள், தபால்தலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற பொருட்கள் தங்களிடம் இருந்தால் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்.
பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரியப் பொருட்களை, சென்னை அல்லது கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நேரடியாக சென்று வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டு சான்றிதழ் சென்னை, அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.