/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு கண்காட்சி அரங்கம் அமைக்க அழைப்பு
/
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு கண்காட்சி அரங்கம் அமைக்க அழைப்பு
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு கண்காட்சி அரங்கம் அமைக்க அழைப்பு
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு கண்காட்சி அரங்கம் அமைக்க அழைப்பு
ADDED : ஜன 04, 2026 07:48 AM
கரூர்: கோவையில் நடக்கும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு கண்காட்சியில், அரங்கம் அமைக்க வரும், 13க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்-கவேல் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு, துணிநுால் துறை மற்றும் இந்-திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன., 29, 30 ஆகிய நாட்களில் கோவை கொடீசியா வளா-கத்தில் நடக்கிறது. இம்மாநாட்டில், கருத்தரங்-குகள், விற்பவர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 100 காட்சியரங்குகளில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி நிறுவனங்கள் வரும், 13-க்குள் கரூர் மண்டல துணை இயக்குனர் அலுவ-லக மின்னஞ்சல் rddtextileskarur@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, மண்டல துணிநுால் துணை இயக்குனர் அலுவலகம், 30/3, நவலடியான் காம்ப்ளக்ஸ், தான்தோன்றிமலை, கரூர்- 639005 மற்றும் தொலைபேசி எண் 04324-299544, 9952209748) என்ற முகவரியில் தொடர்பு கொள்-ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

