/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை மேட்டு வாய்க்காலில் இரும்பு பாலம் அமைப்பு
/
கட்டளை மேட்டு வாய்க்காலில் இரும்பு பாலம் அமைப்பு
ADDED : செப் 20, 2024 01:38 AM
கட்டளை மேட்டு வாய்க்காலில்
இரும்பு பாலம் அமைப்பு
குளித்தலை, செப். 20-
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி திம்மம்பட்டி நெடுஞ்சாலையில், கருங்காளப்பள்ளி கிராமத்தில் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் நெடுஞ்சாலை துறை சார்பில், இரண்டு பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், தற்காலிகமாக குழாய் போட்டு, மண் சாலை அமைக்கப்பட்டது. நெய்தலுார், முதலைப்பட்டி, சேப்ளாப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. தற்காலிகமாக போடப்பட்ட குழாயை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்து பொது பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் செய்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலை துறை சார்பில் பழைய கட்டளை மேட்டுவாய்க்காலில், 6 அடி அகலம் உள்ள இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டதை, குளித்தலை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் தலைமையில், உதவி பொறியாளர் ஜெயபால், ஆர்.ஐ.. சேகர், ஒப்பந்ததாரர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.