ADDED : ஜூலை 09, 2026 05:06 AM

கரூர்:கரூர்
அருகே, காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்கால் பாலத்தில், தடுப்பு சுவர்
அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புகழூரில்,
காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்கால் மேல் பகுதியில், பல
ஆண்டுகளுக்கு முன், சிறுபாலம் கட்டப்பட்டது. பொதுமக்கள்,
விவசாயிகள் அந்த பாலத்தை, காவிரியாற்றுக்கு செல்ல பயன்படுத்தி
வருகின்றனர். மேலும், சிறுபாலத்தின் வழியாக கார், வேன் உள்ளிட்ட
வாகனங்களும் சென்று வருகிறது. இதனால் சிறுபாலம், சாலை பழுதடைந்த
நிலையில் உள்ளது. இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்களும் இல்லை. இதனால்,
இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி பாசன வாய்க்காலில்
விழும் அபாயம் உள்ளது.
எனவே, கிளை வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள
சிறுபாலம் மற்றும் சாலையை சீரமைத்து, தடுப்பு சுவர் அமைக்க, கரூர் மாவட்ட
நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
