/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை, தரகம்பட்டி கலைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்

ADDED : மே 10, 2024 07:26 AM
குளித்தலை : குளித்தலை, அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கியுள்ளதை, மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளித்தலை, அரசு கலைக் கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன், இளங்கலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையத்தை, கல்லுாரியில் தொடங்கி வைத்து கூறியதாவது:தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவிப்பை தொடர்ந்து, குளித்தலை அரசு கலைக் கல்லுாரியில் உள்ள இளங்கலை, 14 பாடப்பிரிவுகளான இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிக கணினி பயன்பாட்டியல், இளம்வணிக நிர்வாகவியல், இளநிலை அறிவியல் பாடங்களான வேதியியல், இயற்பியல், மின்னணுவியல் கணிதம், கணனி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கல்லுாரியில் மாணவர்களுக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கூறினார்.இதேபோல், தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.