/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்
/
தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : செப் 26, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், பயனாளிக-ளுக்கு தொகுப்பு வீடுகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டு-வதற்கான பணி ஆணைகளை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி வழங்-கினார். டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி-ராஜா மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.