/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
588 பேருக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணை வழங்கல்
/
588 பேருக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணை வழங்கல்
ADDED : செப் 20, 2024 02:30 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்து பேசியதாவது: பொருளாதார சூழ்நிலை, கல்விக்கடன், கலந்தாய்வு பல்வேறு காரணங்களால், உயர்கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவர்களின் விவரங்களை, தலைமையாசிரியர் மூலம் தொடர்பு கொண்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில், வங்கிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம், 588 மாணக்கர்களுக்கு உயர்கல்வி பயில சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன. எந்தெந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் அதிகளவில் தேவையாக உள்ளது என்பது குறித்தும், அரசு நடத்தும் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு வழங்கப்படுவது குறித்தும், குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்பை தொடர இயலாதவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்வாறு பேசினார்.
கல்லுாரி கல்வி இயக்குனரகம் திருச்சி மண்டல இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர், கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.