sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு

/

ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு

ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு

ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு


ADDED : அக் 12, 2025 03:05 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில், 13 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள், 6 மாதங்களில் முடிக்கப்படும்,'' என, கிராம சபை கூட்டத்தில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரி-வித்தார்.

கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்-கோவில் கிழக்கு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பேசியதாவது:

ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பஞ்சாயத்தில் மட்டும் நான்கரை ஆண்டுகளில், 17 கோடி ரூபாய் அளவிற்கான வளர்ச்சி திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தார் சாலை அமைத்தல், சிமென்ட் சாலை, வடிகால் வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், புதிய குடிநீர் திட்டப் பணிகள் என, 13 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டப் பணிகளை கிராம சபையிலே தீர்மா-னமாக வைத்திருக்கிறோம். இந்த திட்டப் பணிகள், 6 மாதங்-களில் முடிக்கப்படும்.

மாவட்டத்திற்கு அரசு வேளாண் கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, புதிய பஸ் ஸ்டாண்ட், புகழூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்-டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 24 கோடி ரூபாய் கரூர்-ஈ-ரோடு சாலை விரிவாக்கத்திற்கு செய்யப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல் உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us