கரூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு நிறைவு
கரூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு நிறைவு
ADDED : ஏப் 13, 2026 06:11 PM
கரூர்: கரூர் அருகே, தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜன் பங்குதாரராக உள்ள, ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை, நள்ளிரவில் நிறைவு பெற்றது.
கரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் ஆசி.தியாகராஜன், 65, என்பவர் போட்டியிடுகிறார். இவர் பங்குதாரராக உள்ள, ஆசி எனர்ஜி பிரைவேட் லிமிடெ் நிறுவனம், கரூர்-ஈரோடு சாலை ஆத்துார் பிரிவில் செயல்படுகிறது. அதில் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு மூன்று கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
பிறகு நள்ளிரவு, 11:30 மணிக்கு சோதனையை முடித்து கொண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றனர். இந்த நிறுவனத்தில் இருந்து, தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜனின், தேர்தல் செலவுகளுக்கு பணம் சப்ளை செய்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில், சோதனை நடந்ததாக தெரிகிறது.
