ADDED : செப் 18, 2026 07:13 AM
கரூர்:கரூர்
மாவட்டத்தில் நொய்யல், சேமங்கி, குளத்-துப்பாளையம், கோம்புபாளையம்,
திருகாடு-துறை, தவிட்டுபாளையம், தளவாபாளையம் உள்ளிட்ட
பகுதிகளில், அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம்
தயாரிக்கப்படுகிறது.
ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல்,
கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள்,
இங்கு வந்து வெல்லம் வாங்கி செல்கின்றனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா,
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி
வைக்கப்படுகிறது.கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 30 கிலோ எடை
கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம், 1,600- ரூபாய், அச்சு வெல்லம் ஒரு
சிப்பம், 1,550- ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் ஒரு
சிப்பம், 1,650 ரூபாய், அச்சு வெல்லம் ஒரு சிப்பம், 2,130 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்டது. உருண்டை மற்றும் அச்சு வெல்லம் விலை
தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் கரும்பு விலை உயராததால்
விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
