ADDED : டிச 14, 2025 08:39 AM

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சாலை பணி-யாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, வரன்-முறைப்படுத்த வேண்டும், டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் உண்-ணாவிரத போராட்டம் நடத்தினர்..
இதன்படி, கரூர் வட்டார போக்குவரத்து அலுவ-லகம் முன், நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அதில், கோரிக்கை-களை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அன்பழகன், பெரியசாமி, தமிழ்மணியன், பொன் ஜெயராம், வேலுமணி, ஆரோக்கிய பிரேம் குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
