/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே ஜிலேபி மீன் விற்பனை ஜோர்
/
மாயனுார் கதவணை அருகே ஜிலேபி மீன் விற்பனை ஜோர்
ADDED : ஜூலை 17, 2025 01:40 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, காவிரி ஆற்றில் ஜிலேபி மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. நேற்று, காவிரி கதவணையில் பிடிக்கப்பட்ட மீன்களை, வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
இதில், ஜிலேபி மீன்கள் கிலோ, 120 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், பாறை மீன், 150 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதில், நேற்று மட்டும் ஜிலேபி மீன், 200 கிலோ வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்களை வாங்க உள்ளூர், வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விற்பனை ஜோராக நடந்தது.
முன்விரோதத்தில் தாக்குதல்
6 பேர் மீது வழக்குப்பதிவு

