/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜல்லி, எம்.சாண்ட் விலை கட்டுப்படுத்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்கம் மனு

ADDED : பிப் 13, 2024 12:11 PM
கரூர்: ஜல்லி, பவுடர், எம்.சாண்ட் ஆகிய கிரஷர் பொருட்களின் விலையை கட்டுப்
படுத்த வேண்டும் என, கரூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் ஏராளமான ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்குள்ள, கிரஷர் உற்பத்தி நிறுவனங்களில் ஜல்லி, பவுடர், எம்.சாண்ட் ஆகிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர். இந்த விலையேற்றத்தால் ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் மட்டும், 70 முதல், 80 சதவீதம் வரை நியாமற்ற முறையில் விலையை ஏற்றி வருகின்றனர். ஹாலோ பிளாக் உற்பத்தி குறைவது எங்களை மட்டுமின்றி, இதனை சார்ந்த தொழில்களை பாதிக்கும். கிரஷர் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.