/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு; டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு
/
ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு; டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு
ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு; டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு
ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு; டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு
ADDED : ஜன 16, 2025 07:10 AM
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலையில் இன்று, 63ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.
இறுதி கட்ட பணிகள் குறித்து நேற்று காலை, டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமையில் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல், டி.எஸ்.பி., செந்தில்குமார், கால்நடைத்துறை கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன், தாசில்தார் இந்துமதி, தோகைமலை யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், வெங்கடாசலம் மற்றும் அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சங்க கவுண்டர் உள்ளிட்ட விழா குழு உறுப்பினர்கள் முன்னிலையில், ஜல்லிக்கட்டு விழா இறுதி கட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காளைகளுக்கும், காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, விழா குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திட்டமிட்டப்படி கோவில் காளைகளை காலை, 7:00 மணிக்குள் வாடிவாசல் வழியாக விட்டு விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.