ADDED : ஜூன் 25, 2026 04:14 AM
குளித்தலை:குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில், ஏராளமானோர் மனு அளித்தனர்.
குளித்தலை
தாசில்தார் அலுவலகத்தில் தோகைமலை, குளித்தலை, நங்கவரம் வருவாய்
குறுவட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த, 16ல்
தொடங்கியது. கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை
நலத்துறை அலுவலர் முகமது பைசல் தலைமையில் நடைபெற்றது. ஜமாபந்தி
நிறைவு நாளில் தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் நீதிராஜன் மற்றும்
குறைந்தளவிலேயே அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்கத்திற்கு மாறாக
நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மனு அளிக்க வந்திருந்தனர்.
பின்னர்
விலையில்லா வீட்டு மனை பட்டா, 62 பேருக்கும். புதிய குடும்ப அட்டை, 30
பேருக்கும். வேளாண்மை துறை சார்ந்து இருவர் என, 94 பேருக்கு, 74
லட்சத்து, 40 ஆயிரத்து, 800 மதிப்பில் நலத்திட்ட உதவி
வழங்கப்பட்டது.
