/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜமாபந்தி நிறைவு நாள்; விவசாயிகள் சந்திப்பு
/
ஜமாபந்தி நிறைவு நாள்; விவசாயிகள் சந்திப்பு
ADDED : ஜூன் 27, 2024 03:38 AM
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில், ஜமாபந்தியின் இறுதி நாளையொட்டி நேற்று விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட டி.எஸ்.ஓ., சுரேஷ் தலைமை வகித்தார். தாசில்தார் சுரேஷ், தனிதாசில்தார் மகாமுனி, வேளாண்மை அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை, தோகைமலை, நங்கவரம் ஆகிய மூன்று குறுவட்ட வருவாய் கிராம மக்களிடம் இருந்து, 685 மனுக்கள் பெறப்பட்டன. 110 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இயற்கை மரணம் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, இறப்பு சான்றிதழ் நகல், ஒருங்கிணைந்த சான்று, கணினி சிட்டா, பெயர் திருத்தம், ஜாதி சான்று, தடையில்லா சான்று, தனிப்பட்டா, நத்தம் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வருமானம், வாரிசு, விதவை சான்று மற்றும் வேளாண்மை துறை என, 110 பயனாளிகளுக்கு, ஆறு லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை டி.எஸ்.ஓ., சுரேஷ் வழங்கினார்.
முகாமில் நங்கவரம் விவசாயி சங்கரநாராயணன் பேசுகையில்,''நங்கவரத்தில் அறிவிக்கப்பட்ட புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைத்தல், உணவு கொள்முதல் மையம் அமைத்தல், குளித்தலைக்கு புதிய தீயணைப்பு நிலையம், கிராம செவிலியர் துணை சுகாதார நிலையத்தில் தங்கி பொதுமக்களுக்கு மருத்துவ பணி செய்தல் மற்றும் குளித்தலை பகுதியில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பல கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால், பாசன வாய்க்கால் துார்வாரும் பணியை சிறப்பாக செய்தனர்,'' என்றார்.
ஆர்.ஐ.,க்கள் ஸ்ரீவித்யா, முத்துக்கண்ணு, பானுமதி மற்றும் வருவாய்த்துறை, வேளாண்துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.