ADDED : ஜூன் 17, 2026 05:36 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி துவங்கியது. மாவட்ட வட்ட
வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதல் நாளான நேற்று,
கட்டளை குறு வட்டத்திற்கு உட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம்
தெற்கு, மாயனுார், மணவாசி ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்காக
ஜமாபந்தி நடந்தது.
இதில் விவசாய நிலங்களுக்கு பட்டா, வீட்டுமனை
பட்டா, நிலம் அளந்து கல் நடுதல் மற்றும் அரசு சம்பந்தமான கோரிக்கை
மனுக்களை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரிடம் மக்கள்
வழங்கினர்.
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை
எடுக்கப்படும் என கூறப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார்
மதியழகன், மண்டல தாசில்தார், தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர். தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கவுள்ளது.
