/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் ஜமாபந்தி 269 மனுக்கள் பெறப்பட்டது
/
கிருஷ்ணராயபுரத்தில் ஜமாபந்தி 269 மனுக்கள் பெறப்பட்டது
கிருஷ்ணராயபுரத்தில் ஜமாபந்தி 269 மனுக்கள் பெறப்பட்டது
கிருஷ்ணராயபுரத்தில் ஜமாபந்தி 269 மனுக்கள் பெறப்பட்டது
ADDED : ஜூன் 21, 2024 07:00 AM
கரூர் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின் அவர், கூறியதாவது:பிறப்பு, இறப்பு சான்று, குடும்ப அட்டை, வகுப்பு சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய, 269 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து வருவாய் தீர்வாயங்களிலும், தொடர்புடைய அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்களின் மீது தனி கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.