தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இன்று ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 12, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜப்பானிய காடை வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் இன்று (12 ல்) நடக்கிறது.

இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர், பண்டுதகாரன்புதுார் கால்நடை

மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு, இலவச ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

அதில், காடை வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், காடையினங்கள், கொட்டகை அமைத்தல், காடைகளுக்கான தீவனம் தயாரித்தல், காடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலை கழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம் படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us