/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.4,000க்கு விற்ற மல்லிகை பூ
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.4,000க்கு விற்ற மல்லிகை பூ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.4,000க்கு விற்ற மல்லிகை பூ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.4,000க்கு விற்ற மல்லிகை பூ
ADDED : ஜன 15, 2024 10:34 AM
கரூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூரில் ஒரு கிலோ மல்லிகை பூ, 4,000 ரூபாய் வரை விற்றது.
தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை, நேற்று, போகியுடன் தொடங்கியது. இன்று சூரிய பொங்கலும், நாளை மாட்டு பொங்கலும், நாளை மறுநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
அதையொட்டி, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் பூக்களை வாங்க குவிந்தனர். அப்போது, ஒரு கிலோ மல்லிகை பூ, 4,000 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரம், 800 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை மல்லிகை பூ விற்பனையானது. அதேபோல், முல்லை பூ ஒரு கிலோ, 2,500 ரூபாய், ஜாதிமல்லி, 2,000 ரூபாய், ரோஜா, 350 ரூபாய், சம்பங்கி, 240 ரூபாய், செவ்வந்தி, 150 ரூபாய், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 70 ரூபாய், துளசி, நான்கு கட்டு, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
* பொங்கல் விழாவையொட்டி காய்கறிகள் வாங்க, கரூர் - திருச்சி சாலையில் உள்ள உழவர் சந்தையில், நேற்று அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர். 25,975 கிலோ காய்கறிகள், 2,800 கிலோ பழங்கள், 630 கிலோ மலை காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. உழவர் சந்தைக்கு, 140 விவசாயிகளும், 4,901 பொதுமக்களும் நேற்று வந்திருந்தனர். மொத்தமாக காய்கறி, பழங்கள் என, 11 லட்சத்து, 5,025 ரூபாய்க்கு விற்பனையானது.